இலக்கணம், இலக்கியம் பற்றிய பதிவு-2

இலக்கணம் இலக்கியம் என்பன தூய தமிழ்ச்சொற்கள்.
அறியாதவர்களும் ஆரிய-சமற்கிருதச் சார்பானவர்களும் வேண்டுமென்றே
லக்‌ஷணம், லக்‌ஷ்யம் என்னும் சமற்கிருதச் சொற்களில் இருந்து
இவை வந்தவை என்று வாய்கூசாமல் சொல்லி வருகின்றனர்.

இலக்கணத்துக்கான சமற்கிருதச் சொல் வியாகரணம்
(வ்யாகரண,, vyākaraṇa) நன்றாக அறிந்த பரவலாக ஆளப்படும் சொல்.

[Apte Dictionary: व्याकरणम् vyākaraṇam
1 Analysis, decomposition. -2 Grammatical analysis, grammar, one of the six Vedāṅgas q. v.; सिंहो व्याकरणस्य कर्तुरहरत् प्राणान् प्रियान् पाणिनेः Pt.2.33. -3
Explaining, expounding. -4 Discrimination. -5 Manifestation. -6 Prediction. -7 The sound...)

Monier-Williams Dictionary
(H1) [Printed book page 1035,3]
vy-ākaraṇa a &c. See vy-ā-√kṛ.
(H2) [Printed book page 1035,3]
vy-ākaraṇa b n. separation, distinction, discrimination, MBh.
explanation, detailed description, ib. ; Suśr.
manifestation, revelation, MBh. ; Hariv.
(with Buddhists) prediction, prophecy (one of the nine divisions of scriptures, Dharmas. 62 ), SaddhP. &c.
development, creation, Śaṃk. ; BhP.
grammatical analysis, grammar, MuṇḍUp. ; Pat. ; MBh. &c.
grammatical correctness, polished or accurate language, Subh.
the sound of a bow-string, L.
________

"லக்‌ஷ்ணம்" (लक्षणम् lakṣaṇam) என்பதற்கு இலக்கணம் என்று ஆப்புத்தே (Apte) அகராதி பொருள் தரவில்லை.
(लक्षणम् lakṣaṇam) [लक्ष्यतेऽनेन लक्ष्-करणे ल्युट् Uṇ.3.8.] 1 A mark, token, sign, indication, characteristic, distinctive mark; वधूदुकूलं
कलहंसलक्षणम् Ku.5.67; अनारम्भो हि कार्याणां प्रथमं बुद्धिलक्षणम् Subhāṣ; उपकारापकारौ हि लक्ष्यं लक्षण- मेतयोः H.4.15; अव्याक्षेपो भविष्यन्त्याः कार्यसिद्धेर्हि लक्षणम्
Monier-Williams அகராதி lakṣaṇa என்பதற்குத் தரும் பொருள்களையும் பாருங்கள் (அத்தலைப்புச் சொல்லின் படத்தையும் இணைத்துள்ளேன்)
(H2) [Printed book page 892,1]
lakṣaṇa mfn. indicating, expressing indirectly, Vedāntas.
lakṣaṇa m. Ardea Sibirica, L.
N. of a man, Rājat. (often confounded with, lakṣmaṇa)
(H2B) [Printed book page 892,1]
lakṣaṇā a f. See s.v.
lakṣaṇa n. (ifc. f(ā). ) a mark, sign, symbol, token, characteristic, attribute, quality (ifc. = ‘marked or characterized by’, ‘possessed of’), Mn. ; MBh. &c.
lakṣaṇa n. a stroke, line (esp. those drawn on the sacrificial ground), ŚBr. ; GṛŚrS.
a lucky mark, favourable sign, GṛŚrS. ; Mn. ; MBh. &c.
a symptom or indication of disease, Cat.
a sexual organ, MBh. xiii, 2303
a spoon (?), Divyāv.
accurate description, definition, illustration, Mn. ; Sarvad. ; Suśr.
settled rate, fixed tariff, Mn. viii, 406
a designation, appellation, name (ifc. = ‘named’, ‘called’), Mn. ; MBh. ; Kāv.
a form, species, kind, sort (ifc. = ‘taking the form of’, ‘appearing as’), Mn. ; Śaṃk. ; BhP.
the act of aiming at, aim, goal, scope, object (ifc. = ‘concerning’, ‘relating to’, ‘coming within the scope of’), APrāt. ; Yājñ. ; MBh. ; BhP.
reference, quotation, Pāṇ. i, 4, 84
effect, operation, influence, ib. i, 1, 62 &c.
cause, occasion, opportunity, R. ; Daś.
observation, sight, seeing, W.
__________

மோனியர் வில்லியம்சின் அகராதியின் பக்கத்தையும் தருகின்றேன்.
ப. அருளியாரும் இன்னும் மிகப்பலரும் இலக்கணம், இலக்கியம் என்பன தூய தமிழ்ச்சொற்கள் என்று விளக்கியுள்ளனர்.
வியப்பூட்டும் எளிய பகுப்பே.

இலக்கணம் = இலக்கு + அணம்,
இலக்கியம் = இலக்கு + இயம்

தமிழ்ப்பேரகராதியின் வன்மையான ஆரிய-சமற்கிருத சார்பை இந்தச் சொல்லில் காணலாம்.
ஆரிய சார்புடையவர்கள் எல்லாரும் விடாது இவை தமிழல்ல
இவை சமற்கிருதம் என்று எந்தச் சான்றும் இல்லாமலும் நேர்மையில்லாமலும் சொல்லுகின்றார்கள்.

செல்வா (செ.இரா.செல்வக்குமார்)

Comments

Popular posts from this blog

அழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி (முகநூல் பதிவு)

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு