Posts

Showing posts from October 23, 2016

கேள் என்னும் சொல்

எழுத்தாளர் முத்துலிங்கம் ஐயாவின் வேண்டுகோளுக்கிணங்க கேள் என்னும் சொல்லைப் பற்றி நான் கூறியதன் கருத்துப்பிழிவைப் பகிர்கின்றேன்.  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கவிருக்கும் தமிழிருக்கைக்காக நன்கொடை திரட்டும் முகமாக  ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 16, 2016)  அன்று    தொராண்டோ அருகே இருக்கும் மார்க்கம் நகரில் அக்கினி இசைக்குழுவினர் ஒரு நிகழ்ச்சி நடத்தினர்.  நிகழ்ச்சி முடிந்தபின்னர் உணவகத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது இப்பதிவில் சுருக்கமாகக் கூறவிருக்கும் கருத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறினேன். முத்துலிங்கம் அவர்கள் மின்னஞ்சலில் இதுபற்றி கேட்டிருந்தார். இதனை முகநூலில் பகிருங்கள் எனக்கூறினார். முகநூலில் பகிர்ந்ததை  இங்கும் பகிர்கின்றேன்/ கேள் என்னும் சொல்லின் அருமையைக் கூறினேன். கேள் என்றால் காதால் கேட்டுணர்தல் (listen), கேள்வி கேட்டல் (வினவுதல்) என்பதை அறிவோம். கேள் என்றால் ஒன்றை வேண்டிப்பெறுதல், உரிமையுணர்ந்து கொண்டாடிக் கொடுக்கச்சொல்லுதல். நோய்க்கு மருந்து முதலிய தந்தால் நோய் தீரும் என்னும் பொருள் (பேச்சுவழக்கில் அந்த மருந்து நல்லா கேக்கும் என்போம...