இலக்கணம், இலக்கியம் பற்றிய பதிவு-2
இலக்கணம் இலக்கியம் என்பன தூய தமிழ்ச்சொற்கள் . அறியாதவர்களும் ஆரிய-சமற்கிருதச் சார்பானவர்களும் வேண்டுமென்றே லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் சமற்கிருதச் சொற்களில் இருந்து இவை வந்தவை என்று வாய்கூசாமல் சொல்லி வருகின்றனர். இலக்கணத்துக்கான சமற்கிருதச் சொல் வியாகரணம் ( வ்யாகரண ,, vyākaraṇa) நன்றாக அறிந்த பரவலாக ஆளப்படும் சொல். [Apte Dictionary: व्याकरणम् vyākaraṇam 1 Analysis, decomposition. -2 Grammatical analysis, grammar, one of the six Vedāṅgas q. v.; सिंहो व्याकरणस्य कर्तुरहरत् प्राणान् प्रियान् पाणिनेः Pt.2.33. -3 Explaining, expounding. -4 Discrimination. -5 Manifestation. -6 Prediction. -7 The sound...) Monier-Williams Dictionary (H1) [Printed book page 1035,3] vy-ākaraṇa a &c. See vy-ā-√kṛ. (H2) [Printed book page 1035,3] vy-ākaraṇa b n. separation, distinction, discrimination, MBh. explanation, detailed description, ib. ; Suśr. manifestation, revelation, MBh. ; Hariv. (with Buddhists) prediction, prophecy (one of the nine divisions of scriptures, Dharmas. 62 ), Sad...