Posts

Showing posts from October 22, 2023

கற்றதனால் ஆய பயனென்கொல்?

திருக்குறளின் "கடவுள் வாழ்த்து" அல்லது "ஆதிபகவன் வழுத்து" என்னும் முதல் படலத்தில் 2-ஆவது குறளாகிய கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன் நல் தாள் தொழா அர் எனின். என்னும் குறளில் வரும் " நற்றாள் தொழாஅர் எனின் " என்னும் அடிக்குப் பலரும் மேலோட்டமாகவே பொருள் கொள்கின்றனர். தொழுதல் என்றால் கூடிச்சேர்தல். ஒன்றித்தல். தொழுதி என்றால் பறவைக்கூட்டம். தொழுவம் என்றால் மாடுகள் கூட்டமாகக் கட்டிவைத்திருக்கும் இடம். தொழுதல் என்றால் கூடிக் கும்பிடுதல். கும்பிடு என்பதே கைகளைச் சேர்த்தலும் உள்ளத்தை ஒன்றித்தலும். தாள் என்பது ‘கால், காலின் அடி’. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல ‘தடம், வழி’ என்பது பொருள். எனவே வாலறிவனின் வழியை அடிக்கால்களை ஒன்றி சேர்ந்து இருத்தல் (பின்பற்றி இருத்தல்). அதாவது உயர்ந்த நல்வழியில் (இறையின் வழியறிந்து ஒன்றி) நடத்தலை வலியுறுத்தியது.