Posts

Showing posts from 2007
தமிழ்வெளி என் முதல் முயற்சி. நம் தமிழிலே பயன் பெருக்கும் அறிவியலைப் பற்றி பலரும் அழகாக எழுதுவதைக் கண்டு மிகவும் மகிழ்பவர்களில் நானும் ஒருவன். முன்னோடி வலைஞர்கள் அனைவருக்கும் என் வணக்கம். என் எண்ணங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஒரு 'ப்லா'க் வேண்டும் என்று எண்ணினேன். பல நண்பர்கள் பலகாலமாக பரிந்துரைகள் செய்து வந்தனர். இதோ துணிந்தும் விட்டேன். முதலிலே தமிழ் முறைக்கு முரண்பட்ட பிறமொழி ஒலிகளைக் குறிக்க ஒரு நல்ல முறை வேண்டும். ஏனெனில் இவ்வகை ஒலிகள் பல இடங்களில் ஆள வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. Blog என்னும் சொல்லையே எடுத்துக்கொள்ளுங்கள். இதில் வரும் b, g ஆகிய இரண்டு ஒலிகளும் தமிழ் முறைப்படி எழுத இயலாது. ப்லாக் என்று எழுதினால் plaak என்றுதான் ஒலிக்க வேண்டும். இது ஏதோ பல்லுக்கு வரும் கோளாரோ என்று எண்ண நேரிடும் b என்பதைக்குறிக்க ப் என்னும் மெய் எழுத்துக்கு முன்னதாக ஒரு சிறு குறி இடலாம். இதனை முன்கொட்டு என்று நான் கூறுகிறேன். எடுத்துக்காட்டாக 'ப் = b ga என்னும் ஒலியைக் குறிக்க ககரத்தின் முன்னே ஒரு முன்கொட்டு இடலாம். Gandhi = 'காந்தி எனவே blog என்ப...