Posts

Showing posts from October 15, 2023

இலக்கணம், இலக்கியம் பற்றிய பதிவு-2

Image
இலக்கணம் இலக்கியம் என்பன தூய தமிழ்ச்சொற்கள் . அறியாதவர்களும் ஆரிய-சமற்கிருதச் சார்பானவர்களும் வேண்டுமென்றே லக்‌ஷணம், லக்‌ஷ்யம் என்னும் சமற்கிருதச் சொற்களில் இருந்து இவை வந்தவை என்று வாய்கூசாமல் சொல்லி வருகின்றனர். இலக்கணத்துக்கான சமற்கிருதச் சொல் வியாகரணம் ( வ்யாகரண ,, vyākaraṇa) நன்றாக அறிந்த பரவலாக ஆளப்படும் சொல். [Apte Dictionary: व्याकरणम् vyākaraṇam 1 Analysis, decomposition. -2 Grammatical analysis, grammar, one of the six Vedāṅgas q. v.; सिंहो व्याकरणस्य कर्तुरहरत् प्राणान् प्रियान् पाणिनेः Pt.2.33. -3 Explaining, expounding. -4 Discrimination. -5 Manifestation. -6 Prediction. -7 The sound...) Monier-Williams Dictionary (H1) [Printed book page 1035,3] vy-ākaraṇa a &c. See vy-ā-√kṛ. (H2) [Printed book page 1035,3] vy-ākaraṇa b n. separation, distinction, discrimination, MBh. explanation, detailed description, ib. ; Suśr. manifestation, revelation, MBh. ; Hariv. (with Buddhists) prediction, prophecy (one of the nine divisions of scriptures, Dharmas. 62 ), Sad

இலக்கணம், இலக்கியம் ஆகிய சொற்கள் தூய தமிழ்ச்சொற்கள்

இலக்கணம் இலக்கியம் ஆகியவை தூய தமிழ்ச்சொற்கள் இவற்றை சமற்கிருதத்தில் இருந்து வந்தவை என்பது சில சமற்கிருதப் பற்றாளர்கள் சொல்லிவரும் ஒரு செல்லாக் கருத்து. சமற்கிருதத்தில் வியாகரணம் என்னும் சொல்தான் இலக்கணத்தைக் குறிப்பது. இலக்கு + அணம் = இலக்கணம். இலக்கு + இயம் = இலக்கியம்.. இதில் வரும் -அணம் என்னும் பின்னொட்டு பற்றிய கேள்வி ஒன்றுக்கு நான் கூறிய விடையை இங்கே பகிர்கின்றேன். அணம் என்பது ஒரு பின்னொட்டு. பொருள் பொதிந்த ஒன்றுங்கூட. ஏராளமான தமிழ்ச்சொற்கள் இந்த அணம் என்னும் பின்னொட்டைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. கட்டணம் என்பதை அனைவரும் அறிவர். கட்டு+அணம் = கட்டணம் இதே போல ஒத்தணம் என்பது ஒத்தடம் கொடுப்பது. ஓற்று ஒத்து + அணம் = ஒத்தணம். இதே போல பூசணம், பூஞ்சணம் என்பது பூஞ்சைக்காளான், சிக்கணம் என்பது சிக்கல், தூங்கணம் என்பது தொங்கும் கூடுகட்டி வாழும் தூக்கணாங்குருவி. தீக்கணம் என்பது தீமூட்டும் தீக்கோல், உரலில் கூலிக்கு நெல் குத்துபவளைக் கொட்டணக்காரி என்பர். இங்கே கொட்டணம் என்பது குத்துதல். கொட்டுதல் => கொட்டு + அணம் = கொட்டணம் சப்பணம் சப்பளாங்கால் போடுதல், அதாவது கால்